தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக சைரன் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டுமே நடித்து வந்த கீர்த்தி, முதல் முறையாக ஹிந்தியில் நடித்து வருகிறார். அட்லீ தயாரிப்பில் உருவாகி வரும் பேபி ஜான் திரைப்படதில் கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகி.
தமிழில் வெளிவந்த தெறி படத்தின் பாலிவுட் ரீமேக்கான இப்படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் First லுக் வெளிவந்தது.
மோசமான சம்பவம்
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.
இந்த பேட்டியில், “ஒரு நாள் நானும் எனது தோழியும் தெருவில் சென்றுகொண்டு இருந்தபோது, ஒரு பையன் நல்லா குடித்துவிட்டு என் மேல் வந்து விழுந்தான், அவனை நான் ஓங்கி அடித்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டடேன்”.
”சில நிமிடங்களுக்கு பின் திடீரென எதோ என் தலையில் வந்து அடித்தது போல் இருந்தது. நான் விபத்தில் சிக்கிக்கொண்டேன், இருந்துவிட்டேன் என எண்ணினேன். ஆனால், அப்படி நடக்கவில்லை”.
”அந்த பையன் என் தலையில் அடித்துவிட்டு வேகமாக ஓடினான். எனக்கு சில நிமிடங்கள் என்ன நடந்தது என்றே புரியவில்லை. அதன்பின் நானும் எனது தோழியும் அவனை துரத்தி பிடித்தோம். பக்கத்தில் ஒரு போலீஸ் பூத் ஒன்று இருந்தது. அங்கு நடந்ததை கூறி அவனை ஒப்படைத்துவிட்டோம்” என கூறினார்.