குடிநீர் பெற்றுத்தருமாறு கோரி பொதுமக்கள் ஆர்பாட்டம்

295

வத்துகாமம் பன்விலை வீதியில் மக்கானிகம சந்தியில் குடிநீர் பெற்றுத்தருமாறு கோரி பொதுமக்கள் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கண்டி, குண்டசாலை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஏழு கிராமங்ளைச் சேர்ந்தவர்ளே மேற்படி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 17 வருடங்களுக்கு முன் இப் பிரதேசத்திற்கு குழாய் நீர் வழங்குவதற்காக ஏற்பாடுகள்மேறகொள்ளப்பட்டன. தண்ணீர் குழாய்கள் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை பொருத்தப்பட்டுள்ளதாகவும்  அவர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் மேற்படி நீர் வினியோகத்திற்கான நீர் தாங்கி ஒன்றும் நிர்மாணிக்கப் பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை குடி நீர் கிடைக்கவில்லை என்றும் அதற்கான எதுவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் கூறியே அப் பிரதேச மக்கள் வத்துகாமம், பன்வில வீதியை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

தமது பிரதேசத்தில்  இரு புறங்களிலும் குழாய் நீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள போதும் இடைப்பட்ட  சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே நீர் வழங்கவேண்டி இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

SHARE