குடும்ப வைத்தியருக்காக வருடக் கணக்கில் காத்திருக்கும் கனடியர்கள்

80

 

கனடாவின் நோவா ஸ்கோட்டியாவில் குடும்ப வைத்தியருக்காக மக்கள் வருடக் கணக்கில் காத்திருக்க நேரிட்டுள்ளது.

மாகாணத்தைச் சேர்ந்த 15000 பேர் கடந்த மூன்று ஆண்டுகளாக குடும்ப வைத்தியர்கள் சேவையை பெற்றுக்கொள்ள காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப வைத்தியருக்காக காத்திருக்கும் பலருக்கு இதுவரையில் அந்த சேவை கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2021ம் ஆண்டின் பின்னர் குடும்ப வைத்தியருக்காக காத்திருப்போரின் மொத்த எண்ணிக்கை 153373 எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சனத்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட சில காரணிகளினால் இவ்வாறு குடும்ப வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE