கௌதம் மேனன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித்.
சத்யதேவ் என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்காவும், த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
நவம்பர் மாதத்தில்தான் படத்தை வெளியிட இருக்கிறார்கள்.
இதில் அஜித்துக்கு வில்லன் யார் என்று தெரியாமல் இருந்த நிலையில் ராஜசிம்மன் என்ற நடிகர் வில்லனாக நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது.
இவர் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘குட்டிப்புலி’ படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.