குமார் குணரட்னம் கறுப்பு பட்டியலில் சேர்ப்பு என்பது அரசின் பொய்:

376
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும், அந்த பொது வேட்பாளராக முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னத்தை நிறுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

குமார் குணரட்னம், கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை.

இது அரசாங்கம் கூறி வரும் பொய்யான கதை. ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரிகளின் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து முன்னிலை சோசலிசக் கட்சி பல இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

ஐக்கிய சோசலிசக் கட்சி, நவசமசமாஜக் கட்சி உட்பட இடதுசாரி கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானித்துள்ளோம்.

முன்னிலை சோசலிசக் கட்சி குமார் குணரட்னத்தை பொது வேட்பாளராக பெயரிட்டுள்ளது.

அத்துடன் இது குறித்து ஜே.வி.பியுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கின்றோம்.

கடந்த காலம் முழுவதும் குமார் குணரட்னத்தை நாட்டுக்கு அழைக்கும் முயற்சிகளை கட்சி மேற்கொண்டது.

அவர் இலங்கைக்கு வர விரும்புகிறார்.கட்சி என்ற வகையில் ஜனாதிபதித் தேர்தலுக்காக மாத்திரம் அவரை அழைக்கவில்லை.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக அவரை இலங்கை வரவழைப்பதே எமது நோக்கம் எனவும் புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE