குருநாகல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் பலி…

289

குருநாகல் – மாவத்தகம, பரகஹதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவமானது நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

பரகஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குருநாகல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் பலி

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

SHARE