குருநாகல் – பொல்பித்திகம பகுதியில் விபத்து: 8 பேர் காயம்

107

 

குருநாகல் – பொல்பித்திகம பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் இலங்கை போக்குரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமமைந்துள்ளனர்.

குருநாகல், பொல்பித்திகம, ரம்பாகொடெல்ல பகுதியில் வீதியோரத்தில் லொறியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், குருநாகலில் இருந்து – மடகல்ல நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, அதன் பின்னால் அதிவேகமாக வந்து மோதியுள்ளது.

இந்த விபத்தில், 8 பேர் காயமடைந்த நிலையில், பொல்பித்திகம ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

19 வயதிற்கும் 66 வயதிற்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் மேலதிக சிக்கிச்சைகளுக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE