குறிப்புப் புத்தகங்களை எடுத்து தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள், ஒரு பெருந் தலைவன் உருவாகிறான். அவனை ஞாபகமாக உம்மனதில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள்.

50

 

குறிப்புப் புத்தகங்களை எடுத்து தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள், ஒரு பெருந் தலைவன் உருவாகிறான். அவனை ஞாபகமாக உம்மனதில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள்.
செப்டம்பர் 22 ஆம் திகதி ஜனாதிபதித் தோழரின் வெற்றி உறுதி செய்யப்பட்டபோது, அனைத்து வேட்பாளர்களும் ஒரு அரங்கில் இருக்க பின்னே இருந்து, ஜனாதிபதி தோழரை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தார் நாமல் ராஜபக்ச. அப்போது நினைத்தேன் இந்தச் சதுரங்க ஆட்டத்தில் அவன் பலமாக களமிறங்கப் போகிறான் என்று.
அன்று தொட்டு தேசிய அரசியல் களத்தில் தனது நிதானமான ஆட்டத்தை அரங்கேற்றி வருகிறான் இந்த எதிர்கால ஜனாதிபதி. நாமல் விடயத்தில் இவ்வளவு உறுதியான நிலைப்பாடு எதற்கு…….? என்று நீங்கள் நினைக்கலாம், அல்லது மாலிமா மாந்தர்களுக்காக அயராது சிரித்து சிரித்து தமது பங்களிப்பை வழங்கியது போன்று இப்பதிவும் நகைப்புகளால் நிறைக்கப் படலாம்.
ஆனாலும் ஒரு தலைவன் உருவாகிறான் அவன் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது, தனது இளமைக் காலத்தை தந்தையின் ஆட்சியின் கீழ் சௌகரியமாக கழித்து விட்டு இப்போது பக்குவம் அடைந்தவனாக, அச்செளகரியமான வட்டத்துள் இருந்து வெளியேறி, அரசியல் தலைமைத்துவப் பாசறையில் முதல் தடவையாக பாடம் படிக்கத் தள்ளப்பட்டிருக்கிறார்.
ஊடகங்களில் அவருடைய பிரசன்னம் மற்றும் பாராளுமன்ற உரைகள் என்பன, நேர்த்தியாக முன்வைக்கப்படுகின்றன. நாமல் மீதான எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்கவும், தண்டனைகள் வழங்கவும், ஆட்சியாளர்களுக்கும் ஆளுமைகள் இல்லை. மேலும் நிரூபித்தாலும், அவர் L Board அரசியல்வாதியுமல்ல AD License உள்ள பரம்பரை அரசியல்வாதி, அவற்றையும் சுய சிந்தனையற்ற மக்களின் ஆதரவுப் பேரலையாக மாற்றிடலாம்…
ஊடக அறிக்கைகளில் அவ்வளவு நிதானத்தைக் கடைப்பிடிக்கின்றார், புன்சிரிப்புடன் அரசாங்க செயற்பாடுகளை துவம்சம் செய்து விடுகிறார்., Cringe தனம் ஏதுமில்லாத பக்குவமான உரைகள், அந்த சிரிப்பாலே எதிர்காலத்தில் ஜனாதிபதி பீடம் ஏறி விடுவார். ஒன்றுமே இல்லாமல் பொய்களை சொல்லி மக்கள் அலையை தன் பக்கம் திருப்ப முடியும் என்றால் நாமளுக்கு அந்த மக்களலையை திரட்டி கொள்ள நீண்ட காலம் தேவைப்படாது..
எது எப்படியோ ஐந்து வருடங்கள், 10 அல்லது 20 வருடங்கள் சென்றாலும் அடுத்த தலைமுறை ஜனாதிபதியாக நாமல் வருவதற்கான சாத்தியம் அதிகமாகவே இருக்கிறது. அதற்கான அனைத்து ராஜதந்திர காய்களையும் மிக மிகத் திட்டமிட்டு நகர்த்தி வருகின்றார். இன்னும் மிகக் குறுகிய காலங்களில் இலங்கை ஜனாதிபதியாக நாமல் வர வேண்டும் என்று இந்த நாட்டு மக்கள் அலை எழுந்தாலும் ஐயமேதுமிருக்காது. அதுதான் எம் மக்களின் Design உம் கூட…
SHARE