குறுகிய காலத்தில் அதிகளவான சாதனங்களை ஆக்கிரமிக்கும் iOS 10 இயங்குதளம்

204

625-500-560-350-160-300-053-800-748-160-70-7

ஆப்பிள் நிறுவனம் அண்மையில் தனது மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 10 இனை அறிமுகம் செய்து வைத்திருந்தது.

இந்த இயங்குதளமானது தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐபோன்கள் உட்பட முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிளின் மொபைல் சாதனங்கள் பலவற்றிலும் நிறுவி பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

இந்நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டே வாரங்களில் உலகெங்கிலும் உள்ள சுமார் 54.23 சதவீதமான ஆப்பிளின் மொபைல் சாதனங்களில் இந்த இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட குறித்த இயங்குதளத்தின் ஏனைய பதிப்புக்கள் இவ்வளவு குறுகிய காலத்தில் அதிகளவான மொபைல் சாதனங்களில் நிறுவப்பட்டிருக்கவில்லை.

எனவே இது ஒரு புரட்சியாக பார்க்கப்படுகின்றது. அத்துடன் 40.03 சதவீதமான அப்பிளின் மொபைல் சாதனங்களில் iOS 9 இயங்குதளமும், எஞ்சியவற்றில் ஏனைய பதிப்புக்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

iOS 10 பதிப்பானது பல்வேறுபட்ட புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளதுடன், வேகமாக தொழில்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமையே இப் புரட்சிக்கு பிரதான காரணம் ஆகும்.

625-0-560-320-500-400-194-800-668-160-90-4

SHARE