தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த வெல்லே சாரங்கவின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் கைக்குண்டு ஆகியவற்றுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யுக்திய நடவடிக்கையின் கீழ் மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் மேல்மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் களனி, கங்காமொல வீதி, மட்டக்குளிய ஆனையிறவுத் தோட்டம், கொழும்பு 15 ஐச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளை மட்டக்குளிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.