சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகமான சிசிடிவி தொழில்நுட்பமானது இன்று பல திருடர்களையும், குற்றவாளிகளையும் கதிகலங்கச் செய்துவருகின்றது.
இதன்காரணமாக பல குற்றங்கள் குறைவடைந்துள்ளதுடன், குற்றவாளிகளை இலகுவாக இனங்கண்டுகொள்ளக்கூடியதாகவும் இருக்கின்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது மற்றுமொரு கமெரா தொழில்நுட்பத்தினை பிரித்தானிய பொலிசார் அறிமுகம் செய்கின்றனர்.
இத்தொழில்நுட்பத்தின் மூலம் சிறிய ரக கமெரா ஒன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடலில் பொருத்தப்படும்.
இவ்வாறு பொருத்தப்படும் கமெராக்கள் கட்டுப்பாட்டு அறை ஒன்றுடன் இணைக்கப்பட்டு பதிவு செய்யப்படும் வீடியோக் காட்சிகள் சேமிக்கப்படும்.
அத்துடன் பதிவு செய்யப்படும் வீடியோ காட்சிகள் 31 நாட்களுக்கு பாதுகாக்கப்படும். அதன் பின்னர் அவை அழிக்கப்பட்டுவிடும்.
இக் கமெராக்கள் முதன் முறையாக 22,000 மெட்ரோபொலிட்டன் பொலிசாரில் பொருத்தப்படவுள்ளது.
இதனால் பொலிசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஓடுபவர்களுக்கும் இனி ஆப்பு உறுதி.