குற்றவாளிகளுடன் தன்னால் பணியாற்ற முடியாதென்று கூறிய முன்னாள் நீதிபதி! முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று அவர்களை ஒதுக்கி வைத்து அரசியல் செய்யமுடியாது என்று கூறுவது வேடிக்கைக்குரியது

325

குற்றவாளிகளுடன் தன்னால் பணியாற்ற முடியாதென்று கூறிய முன்னாள் நீதிபதி! முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று அவர்களை ஒதுக்கி வைத்து அரசியல் செய்யமுடியாது என்று கூறுவது வேடிக்கைக்குரியது. 

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள்வலுவடைகின்றன.   வடக்கு மாகாண முதலமைச்சர்அலுவலகத்தில் இடம்பெற்ற கூட் டமைப்பின் அனைத்து கட்சிக ளுடனானசந்திப்பொன்றின் போது விக்னேஸ்வரன் தெரிவித்திருந்த கருத்துக்கள் கடும் சர்ச்சைகளையும் வாக்குவாதங்களையும் ஏற்படுத்தியிருந் தது. மேற்படி கூட்டத்தின்போது முன் னாள் வன்முறையாளர்களுடன் தன்னால் இணைந்து பணியாற்றமுடியாதென்று விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். கூட் டமைப்பில் அங்கம் வகிக்கும்பிரதான கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புர ட்சிகர விடுதலை முன்னணியின் நாடா ளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் வடக்கு மாகாணசபையில் நிலவும் குறைபாடுகளை சுட்டிக்காட் டிய போது, அதற்கு பதிலளிக்கும் வகையிலேயேவிக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் விக்கி, கூட்டமை ப்பில் ஒரு அங்கமான தமிழரசு கட்சி தவிர்ந்த எவரும் தன்னிடம் கேள்விகேட்கும் அருகதையுடை யவர்கள் அல்ல என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். விக்கியின் மேற்படி அபிப்பிராயம் கூட்டமைப்பில் அங்கத் துவம் வகித்துவரும் முன்னாள் ஆயுத அமைப்புக்களான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிbழ மக்கள் விடுதலை கழகம் மற்றும் தமிbழ விடு தலை இயக்கம்ஆகியவற்றால் கடுமையாக ஆட்சேபிக்கப்பட்டதுடன், விக்னேஸ்வரன் இவ்வாறு கூறுவது தவறானதென்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

ஆனால் விக்னேஸ்வரன் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவேதெரிகிறது.  வவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாணசபையின் நடமாடும் சேவைக்கான கூட்டமொன்றில் பேசிய விக்னேஸ்வரன், எந்தவொருசம்பந்தமும் இல்லாமல் இயக்கங்களை விமர்ச்சித்திருக்கிறார். அங்கு பேசியவிக்னேஸ்வரன் மல்லாகம் நீதிமன்றத்தை எரித்தவர்கள் இயக்கங்களே என்று குறிப்பிட்டதுடன், புலிகள் அல்லாத இயக்கங்கள் என்றும் அழுத்தி குறிப் பிட்டிருக்கின்றார்.

இதன் போது மேடையில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான ஈழ மக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் சார்பில் நாடா ளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் உடன் இருந்திருக்கின்றனர். அவர்கள் முன்னி லையிலேயே விக்கி இவ்வாறு தெரிவித்திருக்கின்றனர். இதன் மூலம் முன்னாள் ஆயுத அமைப்புக்கள் தொடர்பில் தன் னுடையநிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதையே விக்னேஸ்வரன் பட்டவர்த்தனமாகியிருக்கிறார். இது தொடர்பில் கூட்ட மைப்பில் அங்கத்துவம் வகித்துவரும்முன்னாள் இயக்க தலைவர் ஒருவர் என்னிடம் இவ்வாறு தெரிவித்தார்.

எங்களுடைய ஆதரவுடன் முதலமைச்ச ரான விக்னேஸ்வரன் தற்போது எங்களை ஓரங்கட்டும் நோக்கில் செயற்பட்டு வருகின்றனர். அவரது ஒரே நோக்கம் எங்களை அவமானப்படுத்தி வெளியேற்றுவதுதான். இந்த அவமானங்கள் தொடருமானால்உங்களின் நிலைப்பாடுதான் என்ன? என்று நான் வினவியதற்கு மேற்படி கட்சியின்தலைவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

குறித்த கட்சியின் தலைவர் குறிப்பிடுவது போன்று விக் னேஸ்வரன் வடக்கு மாகாணசபை தேர்தலின் போது அனைவரது சார்பிலுமான பொது வேட்பாளராகவேகளமிறங்கினார். அனைவரும் அழைத்தால்தான் நான் வருவேன் என்றும் பகிரங்கமாகதெரிவித்தார். இந்த பின்னணியின் ஆரம்பத்தில் எதிர் ப்புத் தெரிவித்த கூட்டமைப்பில்அங்க த்துவம் வகிக்கும் முன்னாள் இயக்கங்கள் இறுதியில் விக்னேஸ்வரனை ஏகமனதாகஆதரிக்கும் முடிவை அறிவித்தனர். உண்மையில் ஆரம்பத்தில் தமிரசு கட்சி யில்சம்பந்தன் மற்றும் சுமந்திரனை தவிர வேறு எவருமே விக்கியை ஆத ரிதிருக்கவில்லை.

பின்னர் சம்பந்தனின் தொடர்சியான வற்புறுத்தலை தொடர்ந்தே தமிழரசு கட் சியினர்விக்கியை ஆதரிக்கும் முடிவை எடுத்தனர். அன்றைய சூழலில் அனைவரது தெரிவும் மாவையாகவே இருந்தது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியை சரி செய்யும் நோக்கில்தான்சமீபத்தில் சம்பந்தன் தான் வகித்துவந்த தமிழரசு கட்சியின் தலைவர் பொறுப்பை மாவையிடம் ஒப்படைத்தார். இப்படி யொரு பின்னனியில் அனைவரது ஆதர வுடனும்முதலமைச்சரான விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்றதும் உடனடியாக முன்னாள்இயக்கங்களை ஓரங்கட்டும் தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்தார். அமைச்சரவையில் தான் விரும்பியவர்களுக்கே இடமளித்தார்.

அதாவது திட்டமிட்டு கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் இயக்கங்களின் சார்பில்அதன் மூத்த உறுப்பினர்கள் அல்லது தலைவர்கள் எவருமே அமைச்சரவையில்இடம்பெறக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதில் வெற்றியும் பெற்றார்.இது பற்றி அப்போது ஓர் ஊடகவியலாளர் சம்பந்தனை வினவிய போது, அனைத்தும்விக்னேஸ்வரனின் முடிவாகும் என்று சம்பந்தன் பதிலளித்திருக்கின்றார்.

அன்று அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் இடம்பெற்ற வாக்குவாதங்களைநினைவுபடுத்தினால் இதனை வாசகர்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.

அன்று வடக்கு மாகாண சபைக்குள் முன்னாள் இயக்கங்களை ஓரங்கட்டியவிக்னேஸ்வரன், இன்று தன்னுடைய இரண்டாவது படலத்தை ஆரம்பித்திருக்கிறார்.அதாவது மக்கள் முன்னிலையில் முன்னாள் இயக்கங்களை கேவலப்படுத்தி, அவர்களை கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றும் செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இதனை விக்னேஸ்வரன் தன்னிச்சையாக செய்கிறாரா அல்லது இது ஒரு கூட்டு வேலைத்திட்டமா? கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் முன்னாள் இயக்கங்களைபொறுத்தவரையில் அவர்கள் இதனை விக்னேஸ்வரன் தன்னிச்சையாக செய்வதாககருதவில்லை.

மாறாக இதற்கு பின்னால் அண்மைக்காலமாக கொழும்பிலிருந்து புதிதாக தமிழர் அரசியலுக்குள் நுழைந்த சக்திகள் இருப்பதாகவே சந்தேகப்படுகின்றனர். இதற்குஅவர்கள் குறிப்பிடும் காரணமும் இலகுவில் நிராகரிக்கக் கூடிய ஒன்றல்ல. விக்னேஸ்வரன் இவ்வாறு தங்களை அவமானப்படுத்தும் போது உள் முரண்பாடுகள்வலுவடையும், வாக்குவாதங்கள் முற்றும் என்பதை தமிழரசு கட்சியினர் நன்கறிவார்கள்.ஆனால் அவர்கள் எவரும் இதுவரை விக்னேஸ்வரனை கண்டிக்கவோ அல்லது தடுத்து நிறுத்தவோ முற்படவில்லை. அவ்வாறாயின் இதன் அர்த்தம் தான் என்ன?

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அண்மைக்கால செயற்பாடுகளைஉற்றுநோக்கும் போது, ஒரு விடயம் தெளிவாக தெரிகிறது. அதாவது, அவர் தன்னைதமிழரசு கட்சிக்குரிய ஒருவராகவே அடையாளம் காட்ட விரும்புகின்றார். இதன் மூலம்கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் ஏனைய கட்சிகள் அனைத்தும்தன்போன்றதொரு நீதிபதியுடன் பணியாற்றுவதற்கான தகுதியுடைவர்கள் அல்ல மாறாகஅவர்கள் குற்றவாளிகள்.

குற்றவாளிகளும் நீதிபதியும் எவ்வாறு இணைந்து பணியாற்றுவது என்றவாறான ஓர் எண்ணத்திலேயே செயற்பட்டு வருகின்றார். உண்மையில் விக்னேஸ்வரன் குறிப்பிடும்முன்னாள் இயக்கங்கள் அனைத்தும் 1987 இந்திய, இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்துவன்முறையை கைவிட்டு ஒரு அரசியல் கட்சியாக தங்களை பதிவு செய்திருப்பவர்களாகும். நிலைமைகளை எடுத்து பார்த்தால் விக்னேஸ்வரனின்பிரச்சினை அவர்களது முன்னைய செயற்பாடுகள் அல்ல மாறாக அவர்களை தொடர்ந்தும்கூட்டமைப்புக்கள் வலுப்பெறாமல் பார்த்துக் கொள்வதுடன் அவர்கள் அனைவரையும்கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி அரசியல் பலமற்றவர்களாக்குவதாகும்.நிலைமைகளை அவதானித்தால் தமிழரசு கட்சியின் உயர்பீடம் ஒரு கணக்கும்போடுவதாகவே தெரிகிறது.

அதாவது, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் இயக்கங்களைச்சேர்ந்தவர்களை திட்டமிட்டு தோற்கடித்து அல்லது அவர்களுக்கு உரிய ஆசனங்களைகொடுக்காமல் விடுவதன் வாயிலாக அவர்களை அரசியலிலிருந்து ஓரங்கட்டுவது. சிலதகவல்களின்படி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி தனித்துபோட்டியிடுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுவதாகவும் கருதப்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டுதான் விக்னேஸ்வரன் தற்போது இயக்கங்களை தாக்கி தொடர்ச்சியாகபேசிவருகிறார் என்றே நம்பப்படுகிறது. இன்று இவ்வாறு பேசும் விக்கி பாராளுமன்றதேர்தலின் போது நிச்சயம் மேடைகளில் இயக்கங்களை தாக்கியே பேசுவார். தமிழரசு கட்சிக்காக பிரசாரங்களில் ஈடுபடுவார்.

இதற்கு பின்னால் கொழும்பை தளமாகக் கொண்டியங்கிவரும் ஒரு தமிழ் உயர் குழாம் செயற்படுவதாகவே ஏனைய கட்சிகள் சந்தேகப்படுகின்றன. தமிழரசு கட்சி தீர்மானிக்கும் இடத்தில் இருந்தால் மட்டும் தான் கொழும்பின் மேற்படி உயர்குழாம்தமிழர் அரசியலுக்குள் செல்வாக்குச் செலுத்த முடியும் மாறாக, கூட்டமைப்புபலமடையுமாயின் அவர்களுக்கான கதவு அடைக்கப்படும். எனவேதான் கூட்டமைப்பிலுள்ள முன்னாள் இயக்கங்களின் கரங்கள் ஓங்கிவிடக் கூடாது என்பதில் அனைவரும் குறியாக இருக்கின்றனர்.

(வாசுதேவன்)

SHARE