சரும ஆரோக்கியம் என்பது அழகுக்கலையின் மூலம் வெளிப்புறத்தோற்றத்தை அழகாக காட்டுவது மட்டுமல்லாமல், நாம் சாப்பிடும் உணவின் மூலமும் சரும ஆரோக்கியம் பேணிக்காக்கப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.அதுவும் மேக்கப் போடும்போது, காலநிலைகளுக்கேற்றவாறு எந்த மேக்கப் போட்டால் அழகாக எடுத்துக்காட்டும் என்பதை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்,
அதுவும் குளிர்காலத்தில் சருமம் வறட்சியடைந்து எவ்வித மேக்கப் போட்டாலும், அவ்வளவாக எடுத்துக்காட்டாது. எனவே குளிர்காலத்திற்காக மேக்கப் சிலவற்றை தெரிந்துகொள்ளுங்கள், சரும பராமரிப்பு * குளிர்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை உதடு வெடிப்பு. இதற்கு வெண்ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும். *குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப்பசை குறைந்துவிடும். * தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெயை தேய்க்கலாம். * குளிர்காலத்தில் மாய்ச்சரைசர்கள் மற்றும் கிரீம்கள் தடவ வேண்டியது அவசியம். * குளிர்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை உதடு வெடிப்பு. இதற்கு, சிறந்த பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக வெண்ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும். கூந்தல் பராமரிப்பு குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழை சாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம். இதனால், கூந்தல் மென்மையாக இருக்கும். மேலும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆலிவ் ஆயில் தடவலாம். இதனால், கூந்தலின் ஈரத்தன்மை வலுவடையும். எண்ணெயை சூடுபடுத்தி, தலையில் தேய்த்து வெயில் காலத்தில் ஊறவிடுவதை விட குறைந்த நேரம் மட்டுமே ஊறவிட வேண்டும். தலையில், அதிக நேரம், எண்ணெய்யை ஊறவிட்டால், அதனால், உடல் நலன் பாதிக்கப்படலாம். அதே போல், மூலிகை சாறுகள் ஏதாவது தலையில் தேய்ப்பதாக இருந்தாலும், அவற்றையும் அதிக நேரம் ஊற விடக் கூடாது. மூலிகை சாறுகள் பெரும்பாலும் குளிர்ச்சி தருபவை, அவை வெயில் காலத்திற்கே உகந்தது. |