குள்ளமாக இருப்பவரா நீங்கள்? அப்படியென்றால் நன்றாக சண்டைபோடுவீர்கள்

389
ஆண்களில் குள்ளமாக இருப்பவர்கள் சண்டைகளில் அதிகளவில் ஈடுபடுகிறார்கள் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டா நகரில் உள்ள தேசிய நோய்த்தடுப்பு ஆணையம் மூலம் சுமார் 600 ஆண்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பொதுவாக இருக்கும் ஆண்களை விட உயரம் குறைவான, கட்டுடல் இல்லாதவர்கள் வெறும் கைகளால் அடித்தோ, ஆயுதங்களால் தாக்கியோ சண்டைபோடும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.”ஷார்ட் மேன் சிண்ட்ரோம்” என்று அழைக்கப்படும் இந்த மன பாதிப்பால், அவர்கள் மிகவும் கொடுமையான மனது கொண்டவர்களாக மாறிவிடுகின்றார்கள்.புறக்கணிப்பும், தவறான வார்த்தைகளுமே அவர்களை இப்படி மாற்றிவிடுவதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

SHARE