குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பங்களிக்கும் பாதாம்

402
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதாம் பருப்பின் பங்கு

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதாம் பருப்பின் பங்கு
நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பாதாம் பருப்பை தருவது எதற்காக என்று அறிந்து கொள்ள வேண்டும். மூளையின் சக்தி பாதாம் பருப்புகளைச் சாப்பிடுவதால் அதிகரிக்கும். பொடியாக அரைத்த பாதாம் பருப்பைப் பாலில் கலந்து தினமும் பருகுவதால் குழந்தையின் உடலில் ஊட்டச்சத்தின் அளவு அதிகமாகச் சேர வாய்ப்புள்ளது. பாதாம் பருப்பு கலந்த பாலை குளிர்காலத்தில் அருந்துவதால் குழந்தையின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் குளிரைத் தாங்கக்கூடிய சக்தியைக் குழந்தையின் உடல் பெறுகின்றது.
பாதாம் பருப்பில் உள்ள புரதச் சத்தானது மூளையின் இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் நினைவாற்றல் மற்றும் மூளையின் சக்தியைப் பெருகுகின்றது. குழந்தையின் மூளையில் உள்ள செல்களில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்து, அவர்களைப் புத்திசாலியாக மாற்றுகின்றது.
குளிர் காலத்தில் சளி ,இருமல் போன்ற தொல்லைகள் குழந்தைகளுக்கு ஏற்படுவது இயல்புதான். இந்த மாதிரி நேரத்தில் பாதாம் கலந்த பாலை குழந்தைக்குத் தினமும் பருக தருவதன் மூலம், அவர்களின் உடலின் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த பால் சாப்பிடுவதன் மூலம் குழந்தைகள் எளிதில் குளிர்காலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாக முடியாது.
பாதாமில் நிறைந்துள்ள விட்டமின் ஏ சத்து கண்களின் வளர்ச்சிக்கு மிக மிக அவசியமானது. இதை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளுக்குக் கண் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாது. கண் பார்வை கூர்மை அடையும்.
பாதாம் பருப்பை இரவு நேரத்தில் தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள், பின் அதன் தோலை உரித்து, காய விடுங்கள். பிறகு இதனைக் குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுங்கள். ஒரு வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்குத் தரப் பாதாம் பருப்புகளை அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளலாம்.இந்தப் பொடியைக் குழந்தைகளின் உணவுகளில் கலந்து கொடுக்கலாம்.சற்று பெரிய குழந்தை என்றால் சின்ன சின்ன துண்டுகளாகப் பாதாம் பருப்புகளை வெட்டி சாப்பிடக் கொடுக்கலாம்.இருப்பினும் குழந்தையின் தொண்டையில் பாதாம்பருப்பு சிக்க வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்க்கப் பால் அல்லது மற்ற உணவுகளில் சேர்த்துக் கொடுப்பது நல்லது.
SHARE