கூகுளின் ஜிமெயில் சேவையில் அதிரடி மாற்றம்: பயன்பெற தயாராகுங்கள்

307

 

தேடுபொறி சேவையில் மட்டுமன்றி மின்னஞ்சல் சேவையிலும் முன்னணியில் திகழும் நிறுவனமாக கூகுள் விளங்குகின்றது.

தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான விசேட அப்பிளிக்கேஷனையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

எனினும் இன்றுவரையும் பலர் இணைய உலாவியின் ஊடாக இச்சேவையைப் பெற்றுவருகின்றனர்.

இவ்வாறானவர்கள் வெவ்வேறு சாதனங்களில் இச்சேவையினைப் பெறும்போது அவற்றின் திரையின் அளவு மாறுபடுவதனால் சில அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடுகின்றது.

எனவே வெவ்வேறு சாதனங்களின் திரை அளவுக்கு ஏற்ப தானாகவே மாறக்கூடிய (Responsive Design) வகையில் ஜிமெயில் சேவையினை வழங்க முன்வந்துள்ளது.

இம் மாற்றமானது அடுத்து வரும் ஓரிரு வாரங்களில் அறிமுகம் செய்யப்படும்.

இதனால் டெக்ஸ்டாப் கணனிகள் போல் அல்லாது மொபைல் சாதனங்களுக்கு விசேட வடிவமைப்பில் ஜிமெயில் சேவை கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE