கெஹலியவுக்கு மார்ச் 25 பிணை கிடைக்குமா?

92

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் திங்கட்கிழமை பரிசீலிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இந்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு தொடர்பான ஆவணங்கள் தமக்கு கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றில் அறிவித்தார்.

இதன்படி, உரிய ஆவணங்களை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்குமாறு மனுதாரருக்கு அறிவித்த நீதிபதி, மனுவை எதிர்வரும் திங்கட்கிழமை பரிசீலனைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார்.

SHARE