கொங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலி ; 200 க்கும் மேற்பட்டோர் மாயம்!

316

கொங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 200 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாய் நேடம்போ மாகாணத்தின் தலைநகர் இனான்கோவில் உள்ள மிகப்பெரிய ஏரியில் சென்ற படகொன்றே இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

183 பேர் மாத்திரம் பயணிக்க கூடியதான படகில் 300 க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளதுடன், அளவுக்கு அதிகமாக சரக்குகளையும் ஏற்றிச் சென்றமையினால் பராம் தாங்க முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் படகில் பயணித்த பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 200 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.

காணாமல்போனவர்களை தேடும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE