ரத்கம பிரதேசத்தில் கடற்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1.76 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 21 வயதுடைய தொடந்துவ மற்றும் முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.