கைக்குத்தல் அரிசி ஊட்டச்சத்து நிறைந்த முக்கிய உணவாகும்.இதில் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்துள்ளதால் வெள்ளை அரிசியைக்காட்டிலும் கைக்குத்தல் அரிசியானது அதிக சுகாதார பலன்களை கொண்டது.
கைக்குத்தல் அரிசியின் பதப்படுத்தலில் அதன் மேல்தோல் மட்டுமே நீக்கப்படுவதால் அதன் தன்மை குறையாமல் முழுதானியமாக இருக்கின்றது. இதன் முழுதன்மையினால் நமது உடலில் அர்டீரியல் பிளேக் உருவாக்குவதிலும் இதய நோய்கள் வாராமல் தடுப்பது மற்றும் அதிக இரத்தகொழுப்பையும் கட்டுப்படுத்தும். தற்போது வெளிவந்துள்ள ஆராய்ச்சிகளின் படி, கைக்குத்தல் அரிசியில் அதிக ஆண்டி ஆக்சிடன்ட்கள் தன்மை நிறைந்துள்ளது என உறுதிபடுத்தியுள்ளனர். இதில் உள்ள பைடோநியூட்ரியன்ட்கள் அதன் முழுதன்மையை தக்கவைகின்றன. கைக்குத்தல் அரிசியில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட்கள் நோய்களை வராமல் தடுத்து வயது மூப்படைதலையும் மெதுவாக்குகின்றது. கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள மக்னீஷியம் நமது உடலில் குளுகோஸ் இன்சுலின் சுரக்கும் நொதிகள் போன்ற 300 மேலான நொதிகள் உருவாக்க உதவுகின்றது. பதப்படுத்தப்பட்ட அரிசி மற்றும் தானியங்கள் தரும் கார்போஹைட்ரேட்டுகளை காட்டிலும் கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள கார்போஹைட்ரேட்டுகள் நமது உடலுக்கு மிகவும் நல்லது. கைக்குத்தல் அரிசியில் மெக்னீஷியம் நிறைந்துள்ளதால் நமது நரம்புகளையும் சதைகளையும் சீராக்குவதற்கும் கால்சியம் தன்மையை சமன் செய்வதற்கும் உதவுகின்றது. மக்னீஷியம் மற்றும் கால்சியம் நமது எலும்புகளுக்கு இன்றியமையாதது. நமது உடலில் மூன்றில் இரண்டு பங்கு மக்னீஷியம் எலும்புகளில் உள்ளது. கைக்குத்தல் அரிசியில் இயற்கை சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த முதல் உணவாக இருக்கின்றது. வளர்ந்து வரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவு தேவைப்படும். கைக்குத்தல் அரிசியானது குழந்தைகளிடையே ஆஸ்துமா நோயை 50% வரை கட்டுப்படுத்தியுள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. |