கைது செய்யப்பட்ட 8 நிராயுதபாணிகள் சுட்டுக்கொலை ; 5 பொலிஸாருக்கு ஆயுள்தண்டனை

592

 

கந்தளாய் பகுதியில் நிராயுதபாணிகளான 8 தமிழர்களை கைது செய்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு குளியாப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி ஆயுள் தண்டனை வித்துள்ளார்.

ஆயுள் தண்டனை
குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை மாத்திரம் குற்றமற்றவர்கள் என அறிவித்து விடுதலை செய்யுமாறு மேலும் அவர் உத்தரவிட்டார்.

1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள் திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட கந்தளாய் பாரதிபுரத்தில் இக்குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக சட்டமா அதிபரினால் அவசரகால உத்தரவு வழக்குகள் நடைமுறைகள் சட்டத்தின் 26 பிரிவின் பிரகாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

SHARE