கைப்பேசிகளுக்கான மின்கலங்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் அப்பிளிக்கேஷன்

371
சாதாரண கைப்பேசிகளை விடவும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படும் மின்கலங்களில் விரைவாக சார்ஜ் குறைந்து செல்கின்றமை அறிந்ததே.இதற்காக கூடிய Amh உடைய மின்கலங்கள் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படுகின்ற போதிலும் மின்கலங்களின் ஆயுட்காலத்தினை அதிகரிக்க மேலும் பல ஆய்வுகள்
இடம்பெற்றுவருகின்றன.

இவற்றின் ஒரு அங்கமாக அமெரிக்காவின் Purdue பல்கலைக் கழக ஆய்வாளர்கள் குறியீடுகளை (Code) கொண்ட அப்பிளிக்கேஷனின் ஒன்றினை வடிவமைத்துள்ளனர்.

எனினும் இது அன்ரோயிட் இயங்குதளங்களில் செயல்படக்கூடிய மொபைல் சாதனங்களுக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கின்றது.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது செயற்படும்போது மின்கலங்களின் ஆயுட்காலமானது 16 சதவீதத்தினால் அதிகரிக்கின்றது.

இதனைக் கண்டுபிடிப்பதற்காக சுமார் 2000 வரையான Samsung Galaxy S3 மற்றும் S4 ஸ்மார்ட் கைப்பேசிகளில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE