கொக்கெய்ன் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

916

சட்டவிரோதமான முறையில் டில்லியிலிருந்து ஒரு தொகை கொக்கெய்ன் போதைப்பொருட்களுடன்  இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பொலிவியா பிரஜையை சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

பொலிவியாவைச் சேர்ந்த 60 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைசெய்யப்பட்ட சந்தேக நபர் பிரேஸிலிலிருந்து ஒரு தொகை கொக்கெய்ன் போதைப்பொருளை எத்தியோப்பியா நோக்கி இந்தியாவின் டில்லி மூலம் எடுத்துச்சென்று அங்கு தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், டில்லியிலிருந்து நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள், குறித்த நபரின் பயணப்பொதியை சோதனையிட்டபோது ஒரு தொகை கொக்கெய்ன் போதைப்பொருட்களை மீட்டுள்ளனர்.

சுமார்  7 கோடியே  50 இலட்டம் ரூபா பெறுமதியான  ஐந்து கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE