கொடிய தீயிலிருந்தும் தப்பி பிழைக்கும் ஆற்றல் கொண்ட அதிசய உயிரினம்

280

காட்டுத் தீயானது ஆஸியிலுள்ள ஒரு பொதுவான பிரச்சினை. ஆனாலும் Echidnas எனும் பாலூட்டி இனம் இக் காட்டுத்தீக்கு தப்பிக்கும் வழிமுறையை கண்டுபிடித்துள்ளது.

ஆஸியிலுள்ள உலர் பற்றைகள் மூலம் காட்டுத் தீயானது பயங்கர வேகத்தில் பரவி அதன் வழியே அனைத்தையும் எரித்துவிடுகிறது.

கடைசியில் கரும் பாலைவனத்தை மட்டும் விட்டுச் செல்கிறது.

images

அதிகமான உயிரினங்கள் தீ என்றால் இயற்கையாகவே பய உணர்வை தோற்றுவிக்கின்றன, அவ் இடத்தை விட்டு வெளியேறுகின்றன. ஆனால் ஒரு விசித்திர உயிரினம் மட்டும் இத் தீக்கு எதிராக ஏதோ தந்திரோபாயத்தை கொண்டுள்ளது.

அசைவின்றிய நிலையில் Echidnas எனும் அவ்வினம் தம் அநுசேப செயன்முறையை குறைப்பதுடன், உடல் வெப்பநிலையையும் குறைக்கின்றது.

ஏப்பிரல் 2016 வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் படி இத் தந்திரோபாயம் அவைகளை காட்டுத் தீயிலிருந்து பாதுகாக்க உதவுவதாக தெருவிக்கப்படுகிறது.

இவை பொதுவாக நிலத்துக்கடியில் குகைகளை தோற்றுவித்து அல்லது விழுந்த மரத் துண்டுகளில் குகைகளை உருவாக்கி ஒளியக் கூடியவை. இதனால் உருவாகும் வெப்பம், நெருப்புக்களிலிருந்து தம்மை பாதுகாக்க முடிகிறது.

முட்டையிடும், குறுகிய மூக்குடைய பாலூட்டி இனம் Echidnas, இவ்வினம் இத்தகைய நேரங்களில் அசைவற்று, செயற்பாடற்ற நிலைக்கு (உறங்கு நிலை) சென்றுவிடும்.

இப் பொறிமுறை பெரும்பாலும் மற்றைய இனங்களால் சக்தியை சேமிக்கப் பயன்படுத்தப்படும் முறையாகும்.

இரை தேடும் நோரங்களில் காட்டுத்தீ ஏற்படுகையில் பெரும்பாலான உயிரினங்கள் காட்டுத் தீயில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அல்லது முறிந்து விழும் மரக்கிளைகளில் அகப்பட்டு இறக்கும் வாய்ப்பு அதிகம்.

ஆதலால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இவ்வகை இனம் உறங்குநிலைக்கு செல்வதானது சிறந்த வழி என கருதப்படுகிறது.

SHARE