கொடுமைப்படுத்திய தாய் – கண்ணீர் விடும் தொலைக்காட்சி பிரபலம்

189

மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி ரசிகர்களிடம் படு பிரபலம். அதில் தனது நடனம் மூலம் கலக்கியவர் கேண்டி.

இவர் தனது சொந்த அம்மா-அப்பாவால் படு கஷ்டங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் இருவரும் அடிப்பது, சினிமாவில் இயக்குனர் பதிலாக தயாரிப்பாளரிடம் செல் என அசிங்கமாக பேசுவது, பணம் வேண்டும் என்று துன்புறுத்துவது, அவரது அம்மா போலீஸ் என்பதால் சில விஷயங்களை தடுப்பது என கொடுமைப்படுத்தியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அவர்களின் கொடுமை தாங்காமல் பத்திரிக்கையாளர் முன் தனது கஷ்டத்தை கொட்டியுள்ளார். அப்போது யாரும் எந்த உதவியும் செய்யவில்லை என்றும், தனது அம்மாவுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை என்றும் கண்ணீர் விட்டு பேசியுள்ளார்.

SHARE