யாழ்ப்பாணம் அரியாலையில் தேவாலய ஆராதனையில் ஈடுபட்ட சுவிஸ் போதனரிற்கு கொரோனோ தொற்று ஏற்பட்டிருந்தததையடுத்து அவருடன் பழகியவர்களுக்கும் கொரோனொ தொற்று இருக்கலாமென்று சந்தேகம் வெளியிடப்பட்டிருந்ததது.
இதனையடுத்த அவருடன் தொடர்பை பேணிய யாழ்ப்பாணம் தாவடி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் கொரோனோ தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளியை கிளினிக்கில் சிகிச்சை அளித்த வைத்தியரும் தற்போது கொரோனா தொற்று சோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.