கொரோனா 2ஆவது அலை இன்னும் முடியவில்லை – லாவ் அகர்வால்

288

கொரோனா இரண்டாவது அலையை நாம் இன்னும் கட்டுப்படுத்தவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், கொரோனா தொற்றின் சவால் இன்னும் முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

எனவே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

பண்டிகைக் காலம் நெருங்குவதால் ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர் நெரிசலான இடங்கள், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE