அறிவியல் ரீதியான உண்மைகள் சில சமயம் நம்மை சிலிர்க்க வைக்கும் விடயமாகவும் இருக்கக் கூடும்.
தன்னலம் மிக்கவன், சுயநலவாதி என எவன் இருந்தாலும் அவனும் கூட பூமித்தாய்க்கு ஒப்பானவனே என்பது அறிவியல் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த பூமி பல உயிர்கள் வாழும் ஓர் கிரகம் இது தெரிந்த விடயம் அதே போல தனி மனிதன் ஒவ்வொருவனும் ஓர் தனிக் கிரகம். அதாவது கோடிக்கணக்கான உயிர்கள் வாழும் தனித்தனி கிரகமே என்கின்றனர் விஞ்ஞானிகள்.
மனித உடல் கோடானு கோடி உயிர்கள் வாழ பூமியில் சுற்றிக் கொண்டு இருக்கும் தனிக் கிரகமே. இங்கு உயிர்கள் எனப்படுபவை நுண்ணுயிரிகள் ( Microorganisms ).
இந்த நுண்ணுயிர்கள் நுண்ணோக்கியின் துணைக் கொண்டு பார்க்கும் போது மட்டுமே தெரியும் என்பது வியப்பு. இவை தனிக்கலம், மற்றும் கூட்டுக் கலங்கள் கொண்டவை ஆகும்.
அதேபோல் இந்த நுண்ணுயிர்கள் தீ நுண்மம் Virus, கிருமி (Bacteria), பூஞ்ஞணம் Fungi மற்றும் மூத்த விலங்கு (Protozoa) என்று முக்கிய நான்கு வகையாக பிரித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
குறிப்பாக இந்த நுண்ணுயிர்களில் பெரும்பாலானவை ஆபத்தானவை என்றாலும் கூட மனித உயிர்வாழ்வுக்கு அவசியமான உயிர்களும் இதில் அடக்கம்.
இவை பல்வேறு விதமான நோய்களை ஏற்படுத்துவதாகவும் அதேபோன்று பல நோய்களை தடுக்கும் வகையிலும் இவை மனிதனுக்கு தொழில் செய்து கொண்டு இருக்கின்றன. இவற்றுக்கு உள்ளேயே எதிரிகளும், நண்பர்களும் கூட இருக்கின்றார்களாம்.
இவ்வாறான நுண்ணுயிர்கள் பல கோடி கோடி அதாவது 1.000,000,000,000,000 நுண்ணுயிரிகள் மனித உடலிலும் மற்றும் உடலுக்கு உள்ளேயும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இவற்றிக்கு உலகமே மனித உடல் தான். அந்த உலகத்திலேயே பிறந்தும் இறந்தும் போகின்றன இவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பூமியில் சுமார் 30 இலட்சம் நுண்ணுயிர்கள் அல்லது கிருமிகள் காணப்படுகின்றன அதேபோன்று மனித உடலில் மட்டும் சுமார் 10000 கிருமிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஒவ்வோர் மனித உடலிலும் சுமார் இரண்டு கிலோகிராம் அளவிற்கு நுண்ணுயிர்கள் (கிருமிகள்) வாழ்ந்து வருகின்றன என்ற வியப்பு மிகு செய்தியை வெளியிட்டுள்ளார்கள் விஞ்ஞானிகள்.
இது ஒருவகையில் அருவருப்பு ஏற்படுத்தும் செய்தியாக இருக்கலாம் ஆனால் அத்தனை கோடி உயிர்களை வாழ வைக்கும் பெருமை தனி மனிதனுக்கு கிடைத்துள்ளதே என்பதும் சிறப்பே.