வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் ஒரு சூப்பர் ஹிட் பாடல் உள்ளது.
கோடான கோடி என்ற ஒரு குத்துப் பாடல் உள்ளது, இது ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான பாடலாக அமைந்தது. இதில் குத்துப் பாட்டுக்கு கிளாமர் டான்ஸ் ஆடி மீண்டும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நிகிதா துக்ரால்.
மார்க்கெட் இழந்த நடிகைகள் ஒரே ஒரு மாஸ் குத்து பாடலுக்கு நடனம் ஆடி மார்க்கெட்டை பிடித்தது போல் கோடான கோடி பாடல் மூலம் மீண்டும் சினிமாவில் வலம் வர ஆரம்வித்தவர் நிகிதா.
தெலுங்கு சினிமா மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.
2003ம் ஆண்டு குறும்பு என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
அதன்பின் சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல், முரண், அலெக்ஸ் பாண்டியன், பாயும் புலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
குடும்ப போட்டோ
திரைப்படங்களில் பிஸியாக நடித்துவந்த நிகிதா 2017ம் ஆண்டு கங்கா சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம், குழந்தை என இருந்த இவர் சினிமா பக்கம் அதன்பிறகு வரவில்லை.