கோட்டாவை இரகசியமாக சந்தித்தனர் ரொலே முக்கியஸ்தர்கள் சிறிய விடயங்களை எல்லாம் பெரிய செய்தியாக்கும் இக் குழு ஏன் முக்கியமான இச் சந்திப்பை மட்டும் மறைத்தது

440

பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபாய ராஜபக்சவை புதன் காலை ரொலே முக்கியஸ்தர்கள் இரகசியமாகச் சந்தித்துள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தை பார்வை இடுவதற்காக கடந்த செவ்வாய் கிழமை 05.11.2014 அன்று பாராளுமன்றத்திற்கு வருனை தந்த கோட்டாயபாய ராஜபக்சவை மிக இரகசியமாக ரொலே தலைவர் செல்வம் அடைக்கல நாதன் சந்தித்துள்ளதாக அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் கொழும்பின் சிரேஸ்ர ஊடகவியலாளரிடம் கூறியுள்ளார்.

kothapaya_2அதனைத் தொடர்ந்து ரொலே அமைப்பை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனா ஆகியோர் சந்தித்துள்ளனர்.

அங்கு என்ன பேசப்பட்டது எவை ஆராயப்பட்டன என்பன தொடர்பில் எதுவும் வெளிவராத நிலையில் ஊடகங்களுக்கும் இச் செய்தி மறைக்கப் பட்டுள்ளன

வெளிநாடுகளுக்கு பறந்து செல்லும் வேளையில் எல்லாம் ரெலோ அமைப்பு சிறிய விடயங்களை எல்லாம் பெரிய செய்தியாக்கும் இக் குழு ஏன் முக்கியமான இச் சந்திப்பை மட்டும் மறைத்தது

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரொலேவின் உதவியுடன் கடந்த கால அடாவடிகளை செய்வதற்கு முற்படுவதற்கு கோட்டாபாய ராஜபக்ச உத்தேசித்துள்ளதாகவும் அதற்கு பெறுப்பாக ஜனா நியமிக்கப் பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

அதனை அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலைச் சந்தித்து கிழக்கு மாகாணத்தில் ஜனா வடக்கு மாகாணத்தில் செல்வம் மற்றும் வினோ ஆகியோரை வெல்ல வைப்பதற்கான முழு செலவையும் கோட்டாபாய ஏற்கவுள்ளதாகவும் வெற்றி பெறும் பட்சத்தில் அதன் முழு ஆதரவை எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்விடயத்தை ஜெர்மனியில் இவ் வருடம் நடந்த தியாகிகள் தினத்தில் கிழக்கு மாகானசபை உறுப்பினர் ஜனா அவரது ஆரம்ப கால நன்பர்களிடம் இனி ஒரு பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் அரசுடன் இணைந்து பிரதி அமைச்சுப் பதவி ஒன்றை பெற்று வாழும் காலத்தில் நல்லா இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளதையும் மேற்குறிப்பிட்ட சிரேஸ்ர ஊடகவியலாளரிடம் கூறியுள்ள செல்வம் அடைக்கலநாதனின் நண்பர் இவர்களின் இக் குழுவில் முக்கிய கிறிஸ்தவ மதத் தலைவர் ஒருவரும் கலந்து கொண்டதாக குறிப்பிட்ட அவர் பெயரைக் குறிப்பிட மறுத்து விட்டார்.

SHARE