கோத்தபாயவின் ஜனாதிபதிக் கனவை வீழ்த்திய முரளிதரன்

400

 

காலத்திற்குக் காலம் தமிழினத்தின் போராட்டத்திற்கு எதிராக பல்வேறான காட்டிக் கொடுப்புக்கள், கருத்துப் பரிமாற் றங்கள் என்பன இடம்பெற்று வருகின்றபோதிலும் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்து தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய தீர்வுத்திட்டங்களை கிடைக்கப் பெறாத நிலைக்கு பல்வேறு துரோ கிகள் தமிழ் மக்களிடையே எழுந்து வருகின்றனர் என்பதே வரலாறு.

குறிப்பாக அல்பிரட் துரையப்பா தொடக்கம் லக்ஸ்மன் கதிர்காமர் வரை இவ்வாறான துரோ கிகள் பலர் இனங்காணப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கி றார்கள். அந்த வரிசையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட் டத்திற்கு எதிராகவும் அல்லது தமிழ் மக்களுக்கு எதிராகவும் கருத்துக் களை வெளியிட்டு அரசின் கைக்கூலிகளாகச் செயற்படுவோர் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தாம் பிரபல்யம் அடையவேண்டும் என்பதற்காகவும் அல்லது அரசியலில் நுழைய ஒரு பிரபலத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் திடீ ரென சர்ச்சையான கருத்துக்களைக் கூறுவதன் மூலமாக தம்மை மென்மேலும் வெளிப்படுத்தும் செயற்பாடுகளில் பலர் கள மிறங்குவது வழக்கம்.

அந்த அடிப்படையில் தான் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் என முத்திரைகுத்தப்பட்ட இலங்கையின் முத்தையா முரளி தரன் அவர்கள் ஒரு தமிழர். எமது இனத்தைச் சேர்ந்த ஒருவர் சர்வதேச ரீதியிலான, உள்ளுர் ரீதியிலான கிரிக்கெட் போட்டிகளில் விளை யாடுவது என்றால் நமக்கெல்லாம் பெருமை தானே. நாட்டில் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கும் சந்தர்ப்பத்தில், அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கோத்தபாய ராஜபக்ஷ ஏற்படுத்திய ‘வியத்மக’ என்ற அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முரளிதரன், ‘தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அப்பாவி மக்களை படுகொலை செய்தனர். விடுதலை புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட அன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இனி இந்த நாட்டில் அமைதியாக வாழ முடியும் என்று எனக்கு தோன்றியது அன்றுதான். இலங்கையைப் பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதிதான் அடுத்ததாக அதிபராக ஆட்சிக்கு வர வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்கு அனுபவம் உள்ள ஒருவரால்தான் தீர்வு காணவும் முடியும்’ என தெரிவித்தார். முரளிதரனின் இந்தக் கருத்துக்கள் தான் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனிநபர் ஒருவரது கருத்தை மதிக்கவேண்டும். கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. இது அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமே. எனி னும் அதற்காக ஒருவரை அல்லது ஒரு இனத்தை நோகடிக்கும் வகை யில் அக்கருத்துக்கள் அமை யுமாகவிருந்தால் அதற்கு சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுப்பதற்கு அதிகாரங்கள் இருக் கின்றன. எனினும் இக் கருத்து குறித்து ஊடகங்களில், சமூக வலைதளங்களில் செய்திகள் வர ஆரம்பிக்க, தற்போது முரளிதரன் அவர்கள் தான் கூறிய விடயத்தினை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் திரிபுபடுத்தி செய்திகளாக வெளியிட்டுள்ளனர் எனக் கூறியிருக்கின்றார்.

எது எவ்வாறாகவிருப்பினும் முத்தையா முரளிதரன் அவர்கள் உண்மையான தமிழனாகவிருந்தால் யுத்தம் குறித்து அவர் நன்கு அறிந்திருப்பார். தேசிய பாதுகாப்பு குறித்து யார் கரிசணையுடன் செயற்பட்டாரோ அல்லது செயற்படுகிறாரோ அவரையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்கவேண்டும் என்கிற கருத்தானது மறை முகமாகவும், நேரடியாகவும் அவர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு கைகாட்டுவதாகவே அமைந்துள்ளது. அதேநேரம் கோத்தபாய ராஜபக்ஷவுக்கான வாக்குகள் வடகிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் சரிவடைவதற்கும் இவரது கருத்துக்கள் வலுச் சேர்த்துள்ளது. கோத்தபாய ஒரு இனப்படுகொலையாளி என்ற ரீதியில் தான் தமிழ் மக்கள் பார்க்கின்றனர். ஆகவே தமிழ் மக்கள் கோத்தபாயவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. ரணில் விக்கிரமசிங்கவினுடைய ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறுவதற்கும் முரளிதரனுடைய இந்த சர்ச்சையான கருத்துக்கள் சாதகமாகவே அமைந்திருக்கிறது எனலாம்.
இச்சம்பவத்தின் மூலமாக கோத்தபாய ராஜபக்ஷவின் மீதான வெறுப்பு அதிகரிக்குமேயொழிய குறையாது. ஒருவேளை முத்தையா முரளிதரனுக்கு யாராவது பல கோடி ரூபாய் பணத்தை வழங்கி இவ்வாறு கூறவைத்திருந்தாலும் தற்போதைய நாட்டின் செயற்பாடுகளுக்கு மத்தியில் ஆச்சரியப்படுவதற்குமில்லை.

குறிப்பாக ஒரு நாட்டில் ஜனாதிபதித் தேர்தலில் யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கிற சக்தியாக வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் தலையீடு களை செலுத்திவருவது யாவரும் அறிந்ததே. தற்போது இலங்கை மீது அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் ஜனாதிபதித் தேர்தலில் அதிதீவிர அக்கறை காட்டிவருகின்றன. இதுபோன்று மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை வீழ்த்த அமெரிக்காவின் ஆதரவு டன் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் ரணில் அவர்களையும் இணைத்துக் கொண்டு மைத்திரி – ரணில் கூட்டாட்சியை நிறுவியதன் விளைவு தான் இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத் தலும் உருவாக்கப்பட்டுள்ளது என்பதனை வைத்துத்தான் எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரச்சாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படப்போகின்றன.

முத்தையா முரளிதரனைப் போன்று கோத்தபாயவை ஆதரியுங்கள் என்று கூறும் தமிழர்கள் யாராகவிருந்தாலும் அவர்கள் தமிழினத் துரோகிகளே. ஒரு இலட்சத்து நாற்பதா யிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் கொலை செய்யப்பட்டிருக் கிறார்கள். அதற்குக் காரணம் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பமாகும். யுத்தம் நிறைவடைந்து 05 ஆண்டுகளைக் கடக்கின்றபோதாவது தமிழ் மக்களுக்கானத் தீர்வினை மஹிந்த வழங்கத் தவறியதன் விளைவு அதே சிங்கள இனத்தைச் சார்ந்த கட்சிகள் இணைந்து தான் ஆட்சி பீடத்தைக் கைப்பற்றியது. இந்த நல்லாட்சிக்கு சிறுபான்மையினரின் ஆதரவு ஆட்சியமைக்க பக்கபலமாக இருந்தது. வடகிழக்கில் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரித்துப் பேசும் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் யாராகவிருந்தாலும் அவர்கள் அனைவரும் தமிழினத் துரோகி கள் என்றே ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் எழுதப்படுகின்றது. இதன் மூலமாக வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மஹிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ மீது வெறுப்பினையே காட்டுகின்றனர் என்பதும் தெளிவா கிறது. இதேவேளை தற்போது வட கிழக்கிலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் தமிழர்களும் இணையாமலில்லை.
இலங்கையில் இந்திய புலனாய்வினரின் ஊடுருவல்கள் என்பது இன்று நேற்றல்ல. 1987ஆம் ஆண்டுக்கு முன் இருந்து இவ் ஊடுருவல்கள் ஆரம்பித்துவிட்டன. ஆகவே முத்தையா முரளி தரன் என்பவர் இந்திய அரசி னால் பயன்படுத்தப்படும் ஒரு வராகக் கூட இருக்கலாம். ஆனால் கோத்தபாயவின் தோல்வி இதனால் நிச்சயமாகும். மஹிந்த தரப்பு கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் அதிக சபைகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றனர். கிரிக்கெட் துறை யில் உலகெங்கும் பிரபல்யமான ஒரு தமிழர் இவ்வாறான கருத்தைக் கூறியதன் ஊடாக உலகெங்கும் வாழ்கின்ற அனைத்துத் தமிழ் மக்களாலும் திட்டித் தீர்க்கப் பட்டிருக்கிறார் என்று தான் கூறவேண்டும்.

இவர் தெரிவித்த கருத்துக்களால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை பயக்கும் விடயங்கள் நடைபெறுமா என்றால் அதுவும் இல்லை. முரளிதரன் ஒருவேளை சூட்சுமங்களை வைத்துத் தான் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டிருந்தாலும் அது ரணில் அவர்களின் கட்சி வெல்வதற்கே சாத்தியமாக அமையப்போகிறது. அரசியல் சார்ந்த விடயங்களை முத்தையா முரளிதரன் அவர்கள் அறிந்திருக்கவில்லை எனக் கூறுவதும் தவறு.

இதேநேரம் தற்போது முத்தையா முரளிதரன் அவர்கள், தான் இவ்வாறானக் கருத்துக்களைக் கூறவில்லை என்றும் ஊடகங்கள் தான் திரிபுபடுத்தி செய்திகளை வெளியிட்டுள்ளதாக கூறியிருக்கிறார். செய்திகள் திரிபுபடுத்தப்பட்டு சமூக வலைதளங்களில் தம்மை பிரபல்யப்படுத்திக் கொள்வதற்காக செய்துகொண்ட செயற்பாடு மட்டுமன்றி ஜனாதிபதித் தேர்தலில் மறைமுகமாக ரணில் விக்கிரமசிங்க தரப்பை வெற்றிபெற வைப்பதற்கான திட்டமா முரளியை வைத்து அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்றும் சந்தேகம் கொள்ள வைத்துள்ளதுடன், அரசியலில் நிரந்தர நண்பன், நிரந்தர எதிரி என யாரும் கிடையாது. கோத்தபாய ராஜபக்ஷவின் ஜனாதிபதிக் கனவை வீழ்த்தும் முகமாகவே இவரது கருத்துக்கள் அமைந்திருக்கின்றது. தமிழர் என்ற உள்ளுணர்வு அவருக்கு இருக்கத்தான் செய்யும். ஆகவே கிரிக்கெட்டில் சாதனை படைத்த முத்தையா முரளிதரன் அவர்கள் அரசியலிலும் ஒரு பந்துவீச்சில் சாதனை தான் படைத்துள்ளார் எனலாம். எனவே முத்தையா முரளிதரனிடம் எஞ்சியிருக்கும் ஐந்து பந்துகளும் ஆபத்தானவை.

பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் இம்ரான் கான் போன்று ஒருவேளை ஆட்சியைக் கைப்பற்ற முடியும். தலைசிறந்த பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனது கருத்தானது தமிழ் மக்கள் மத்தியில் கோத்தபாயவுக்கு எந்தவித ஆதரவினையும் பெற்றுத்தரப்போவதில்லை மாறாக அது ரணில் அவர்களின் கட்சியின் வெற்றிக்கு வித்திட்டிருக்கிறது. இதிலொரு விடயம் முத்தையா முரளிதரன் அவர்கள் ஒரு மலையகம் சார்ந்தவர் என்கிற வகையில் மலையக மக்கள் புண்படும் வகையில் சிலர் சமூக வலைதளங்களில் வார்த்தைகளைப் பயன்படுத்துவதைக் காண்கிறோம். இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. இவ்வாறான வேலைகளை எமது தமிழ் சகோதரர்கள் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலர்களாக மலையக மண்ணைச் சேர்ந்த தேவன் உட்பட பலர் கடமையாற்றினார்கள் என்பதனையும் இங்கு சுட்டிக்காட்டுவதோடு தமிழின விடிவிற்காக மலையகத்தைச் சார்ந்த சகோதர சகோதரிகள் தமது உயிரைத் தியாகம் செய்தனர் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அதாவது வடக்கு – கிழக்கு – மலையகம் சார்ந்த தமிழ் மக்கள் இந்த தாயகப் பேராட்டத்தில் பங்கெடுத்து தம்முயிரை மாய்த்திருக்கின்றார்கள் என்பதனையும் நாம் இங்கு சுட்டிக்காட்டியிருக்கின்றோம். எனவே தேசியம், சுயநிர்ணய உரிமை என்கிற விடயங்களை முன்னெடுத்து எமது உரிமைப் போராட்டத்திற்காக குரல் கொடுக்கும் நோக்கில் எமது தமிழ் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களிலுள்ள பலரும் செயற்படவேண்டும். முத்தையா முரளிதரனது கருத்தானது எந்த விதத்திலும் தமிழினத்தைப் பாதிக்கும் ஒரு செயல் வடிவமாக அமையாது என்பதும், எதிர்வரும் 2020 ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவின் தோல்வி என்பது நிச்சயம் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றே கூறவேண்டும்.

– இரணியன் – 

SHARE