LTTE யின் பதிநெட்டு கட்டமைப்புக்களில் கரும்புலிக்கட்டமைப்பை விலக்கக் கோரியது அமெரிக்கா

846

2009051957540102விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தமிழீழக் கனவுடன் கடந்த முப்பது ஆண்டுகள் போராடி வந்தமை யாவரும் அறிந்தது  . இருந்தபோதிலும்  காலத்தின்  கட்டாயத்தில்  தமது இயக்கத்தின் வளர்ச்சியினை போரியல் வரலாற்றில் உலக நாடுகளுடன் ஒப்பிடும் அளவிற்கு கட்மைப்புக்களை புதிது புதிதாக உருவாக்கி வலுப்படுத்தத் தொடங்கினர். ஆரம்பகாலத்தில் கொரில்லாத் தாக்குதலாகவும், அதிரடித்தாக்குதலாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த பிரபாகரன் பிந்நாளில் தற்கொலைப் படையயணியை உருவாக்கிக் கொண்டார். இதன் காரணமாக சர்வதேச நாடுகளில் கண்டனங்களுக்க ஆளானார் பிரபாகரன்.
நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் அமெரிக்க அரசு, விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்ச்சிகள் எடுத்தது. இதில் 52 நாடுகளும் 22 அரச சார்பற்ற அமைப்புக்களும் பங்கேற்றிருந்தன மட்டுமன்றி 7 கட்டப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருந்தன. நோர்வே அரசாங்கத்தின் தலையீடோடு விடுதலைப்புலிகளுக்கான ஆயுதங்கள், தளபாடங்கள் ஒலிபெரிக்கிச் சாதனங்கள், நிலத்துக்கு அடியில் வைத்து இயங்கும் சட்டடைல் கருவிகள் ( சட்டடைல் போன் ) என்பன மறைமுகமாக வழங்கப்பட்டன.

அமெரிக்காவின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரபாகரனை விட்டுவைப்பதால் தனது நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என அமெரிக்கா மட்டுமன்றி அனைத்து நாடுகளும் எண்ணின. இதற்குச் சம்மதம் தெரிவிக்காத பிரபாகரனை எப்படி பேச்சுவார்த்தை மேடைக்கு அழைப்பது என நோர்வேயுடன் கலந்தாலோசித்து இடைக்கால நிருவாகம் தொடர்பில் உடன்படச்செய்தது. இதனூடாக தனது புலனாய்வு நடவடிக்கைகளை விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் ஊடறுக்கச்செய்து வெற்றிகாணலாம். என அமெரிக்கா எண்ணியது.
untitled(3)விடுதலைப்பலிகள் கரும்புலித்தாக்குதல்களை நடத்துவதுபோல் இலங்கை அரசாங்கத்தின் இராணுவப் புலனாய்வை வைத்து அமெரிக்கா ஆளஊடுருவும் படையணியைப் பயன்படுத்தி ஆங்காங்கே விடுதலைப்புலிகளின் தளபதிகளை இலக்குவைத்து கொலைசெய்ய ஆரம்பித்தது.

இதில் விடுதலைப்புலிகளின் விமானப்படைக்குப்பொறுப்பாக இருந்த லெப்ரிணன் கேணல் சங்கர் புதுக்குடியிருப்புப் பகுதியில் வைத்து கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதற்குப்பிறகு படிப்படியாக கேணல் கடாபி கேணல் மகிந்தி, தமிழ்ச்செல்வன் போன்றோரை ஒன்றன்பின் ஒன்றாக கொலை செய்ய ஆரம்பித்தது.

இக்காலத்தில் வன்னிப்பிரதேசத்தில் பிச்சை எடுத்துகொண்டிருந்த பிச்சைக்காரர்களையெல்லாம் கைது செய்து ஒரு முகாமிற்குள் விடுதலைப்புலிகள் அடைத்து வைத்தனர் ஏனனில் இவர்களுடாக தகவல்கள் கசிந்துவிடக்கூடாது என்பதற்காக. ஆளஊடுருவும் படையணிக்கு தகவல் வழங்கியதாக 29 பொதுமக்களை இங்கொன்றும், அங்கொன்றுமாக வீதியில் வைத்து சுட்டுக்கொன்றனர்.

இதனால் ஆளஊடுருவும் படையயின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என விடுதலைப்புலிகள் நினைத்திருனர்; ஆனால் அது சாத்தியமற்றதாகியது. ஆரச தரப்பு முக்கியமானவர்களை தொடர்ந்து கொலை செய்து வர அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் விடுதலைப்புலிகளால் திட்டங்கள் தீட்டப்பட்டன.

ஆனால் பிரபாகரனின் திட்டங்கள் அனைத்தும் விடுதலைப்புலிகள் அமைப்பில் உள்ள பலரினாலும் காட்டிக்கொடுக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் தேசியத்தலைவர் பிரபாகரன் உரையாற்றும்போது விடுதலைப்புலிகளின் கரும்புலிக்கட்டமைப்பே எனது உயிர்மூச்சு என்று கூறினார். இவர்களைவைத்து தாக்குதல்களை நடத்திவந்தார். இதனால் இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மீண்டும் பகமை வலுத்தது.
இடைக்கால நிருவாக வலையமைப்பிற்குள் விடுதலைப்புலிகளை இட்டுச்சென்ற காலத்தில் வேவு நடவடிக்கைகளுக்காக தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சிலர் உல்லாச வாழ்வுக்காக அடிமையாகினர். போரின் தன்மை, அதன் தாக்கம் , அதன் தேவை என்பவற்றினை மறந்த நிலையில் லோரன்ஸ், பொட்டுஅம்மான், துரோணர் நியூட்டன் ஆகியோரால். அனுப்பபபட்ட புலனாய்வுப்போராளிகள்.வன்னியில் புலிகளா ?்்்்

இதனால் இராணுவப் புலனாய்வுப் பிரிவிடம் சிக்கிக்கொண்டனர். இதன்காரணமாக அடுத்தகட்ட விடுதலைப்புலிகளின் படை நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. இதன்போது கருணா அம்மானுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் நிரந்தப் பகமை தோன்றியது. இதனையும் சாதகமாகப் பார்த்த இலங்கையின் புலனாய்வுப்பிரிவு விடுதலைப்புலிகளை இலகுவாகத்தேறாற்கடிக்கலாம் என்ற தீர்மானத்திற்குள் வந்தது. இவை அனைத்துக்கும் பின்னணியில் இருந்து அமெரிக்காவும், நோர்வேயும் செற்பட்டன. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் கிலாரிக்கிளின்டன் இந்தியாவுக்கு விஜயம் செய்து கருணாநிதி மூலமாகவும,; விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் மூலமாகவும் பிரபாகரனை ஆயுதங்களை கீழே போட முயற்ச்சித்தார். இத்தகவல் பிரபாகரனை எட்டியபோதிலும்,

அவர் சரணடைய மறுத்தார். தற்கொலைப்படையின் ஊடாக அனைத்தையும் சாதிக்கமுடியும் என்ற நிலைப்பாடு தொடர்ந்தும் பிரபாகரனிடம் இருந்து கொண்டே வந்தது. இதற்காக தன்னைச்சுற்றி ஆயிரம் கரும்புலிகளை வைத்ரதிருந்தார். பிரபாகரனக்காக என்னேரமும் தமது உயிரை கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர்.
இப்படியான கூழலில் விடுதலைப்புலிகளின் 14 ஆயுதக்கப்பல்கள் சர்வதேசக் கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டன. ஆமெரிக்காவின் விஷேட கப்பல் ஒன்று சர்வதேச கடற்பரப்பில் நின்று கொண்டு விடுதலைப்புலிகளின் கப்பல்பகளை இலங்கையரசுக்குக் காட்டிக்கொடுத்தவண்ணமிருந்தது. முக்கிய விடயம் என்வென்றால் ஆயுதக்கப்பல்களை புலிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சேர்க்க கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களின் உதவி அவசியமாயிருந்தது.1392561_240945149391833_1401838946_n

சர்வதேச கடற்பரப்பில் இருந்து பாதுகாப்பாக கப்பல்களைக் கொண்டுவர டோராப்படகுகள் மூலம் விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் இருபுறமும் ஆதரவு கொண்டிருந்தனர். இவர்களின் பாதுகாப்பையும் மீறி மிகத்துல்லியமான முறையில் விடுதலைப்புலிகளின் கப்பல்களைத் தாக்கியழிப்பதற்கு அமெரிக்கா உதவியது. பிரயோசனமற்ற நிலையில் கரும்புலிகள் வெடித்துசிதறின. 14 கப்பல்களில் எட்டுக்கப்பல்கள் முக்கியமானவை. இவற்றில் இறுதிப்போருக்குத்தேவையான ஆயுதங்கள் சர்வதேச நாடுகளிடம் பெற்றுக்கொண்டுவரப்பட்டன.
இது இவ்வாறிருக்க ஈழப்போரின் இறுதிக்கட்டத்தின் பிரபாகரன் அதிசக்திவாய்ந்த ஆயுதங்களையும் கரும்புலிகளையும் பயன்படுத்தத் தவறிவிட்டார். காரணம் இறுதி நேரத்திலாவது சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகள் அமைப்பு மீது கரிசனை காட்டும் என்று நினைத்தாரோ என்னவோ.

ஆனால் அவ் ஆயுதங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டிருந்தால் பாரிய ஓர் அழிவினை வன்னி சந்தித்திருக்க வேண்டியிருக்கும். கணிசமான அளவு கரும்புலிகளே இறுதிப்போரில் வெடித்துச் சிதறினர். உதாரணமாக இரணைமடுக்குளத்தை உடைக்க வந்த 5 கரும்புலியினர் இராணுவத்திடம் வந்து சரணடைந்த காரணத்தினால் பிரபாகரனின்போராட்த்தின் உத்தி திசை திரும்பியது.

நிச்சயமாக இரணைமடுக்குளத்தினை உடைத்திருந்தால் இராணுவத்தினர் பெருமளவில் நீரில் அடிபட்டுப்போயிருப்பார்கள். இது விடுதலைப்புலிகளுக்குச் சாதகமாக அமைந்திருக்கும். மறுபுறம் பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
ஆரம்பகால கட்டத்திலே பிரபாகரன் கரும்புலிக்கட்டமைப்பினை நீக்கியிருந்தால் இன்று வடகிழக்கில் முதலமைச்சராக இருப்பதற்கான வாய்ப்புக்கள் இருந்திருக்கும் ஏனனில் அவரது செல்வாக்கு அப்படி. இவரை எதிர்த்துப்போட்டியிடக்கூட யாரும் இருந்திருக்கமாட்டார்கள்.
சர்வதேச நாடுகளின் படைகள் கொண்டிருக்கக்கூடிய கட்டமைப்புக்களை விடுதலைப்புலிகள் கொண்டிந்தார்கள் என்பது தமிழினம் பெருமைப்படக்கூடிய விடயம்தான். ஆனால் அதனைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியாமைதான் பிரபாகரன் விட்ட தவறாகும். கரும்புலிகளை வைத்துக்கொண்டு எதனைச் சாதிக்கலாம் என்ற கனவு உடைத்தெறியப்பட்டது.

முன்னர் எமது பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதுபோல என்று ஒசாமாபில்லேடன் இரட்டைக்கோபுரத்தாக்குதலை நடத்தினாரோ அன்றே உலகில் உள்ள ஆயுதக்குழுக்களை முடக்க அமெரிக்கா திடசங்கற்பம் பூண்டிருந்தது. மட்டுமன்றி சர்வதேச ரீதியாக ஆயுதப்போரட்டம் பற்றிய அவதானிப்புக்கள் அதிகரித்துள்ளது என்பதை பிரபாகரன் இறுதியில் மறந்துவிட்டார்.

அவரது இலக்கு தமிழ் ஈழமாகவே இருந்தது. திறமையான போர்வீரன் ஒருவன் மாற்றான் காலடியின் கீழ் சரணடையமாட்டான்.  என்பதற்கு உதாரணமாக விளங்கியிருந்தார் பிரபாகரன்.  புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் உன்ற உச்சரிப்பே அவரிடம் இருந்தது.  அதில் முக்கியமான இன்னொரு விடயம் என்வென்றால் சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிகளின் தமிழீழ வைப்பகம்  அங்கீகாரம் பெற்றிருந்தமை விடுதலைப்புலிகளின் சிறப்பம்சமாகும்.
ஆகவே நோர்வே மற்றும் அமெரிக்காவின் ஆலோசனைப்படி பிரபாகரன் நடத்திருப்பாரென்றால்; இன்று பிரபாகரன் நல்லதொரு நிலையில் இருந்திருக்கக்கூடும். ஆனால் பிரபாகரனின் போராட்டத்தில்தான் இன்று சர்வதேச ரீதியாக இலங்கைத் தமிழர்களின் உரிமைப்பிரச்சினைகளுக்கு நீதி கிடைக்குமளவிற்கான சூழல் உருவாகியுள்ளது. இதனடிப்படையில் தமிழர்களுக்கான தீர்வு வழங்குவதற்கு உலக நாடுகள் தயாராகவுள்ளன

ERANEYAN.

SHARE