கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரின் விபரம்

87

 

Fox Hill கார் பந்தயத்தின் போது நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 19 பேர் காயமடைந்து தியத்தலாவை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

விபத்தில் 4 போட்டிக் கண்காணிப்பாளர்கள், மூன்று பார்வையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

கோர விபத்து
விபத்தில் உயிரிழந்தவர்களில் வெலிமடை மற்றும் டயரபவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் 55 வயதுடையவர் என்பதுடன் விபத்தில் உயிரிழந்த 8 வயது சிறுமியும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களில் சீதுவ, ராஜபக்சபுர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரும் அடங்குவார்.

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும், மாத்தறை, ராகுல வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரும், மாத்தறை, கொடகம பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரும் விபத்தில் உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர்.

கார் பந்தயம்
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், அவர் அக்குரஸ்ஸ, வளவ்வத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த மூவர் பதுளை பொது வைத்தியசாலையிலும், ஏனையவர்கள் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற Fox Hill Supercross கார் பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட Fox Hill Supercross மோட்டார் பந்தயத் தொடர் ஐந்து வருடங்களின் பின்னர் நேற்று மீண்டும் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

SHARE