கோலிவுட் ஹீரோவுக்கு போட்டியாக வரும் பாலிவுட் ஹீரோ 

421




மாதவன், தனுஷ், சித்தார்த் என கோலிவுட் ஹீரோக்கள் இந்தி படங்களில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் பாலிவுட் ஹீரோக்கள் கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் இருந்தனர். கடந்த ஆண்டு ஹிருத்திக் ரோஷன் சென்னை வந்தபோது அவரை பார்க்க ரசிகர்கள் திரண்டனர். அதைக்கண்டு மிரண்டுபோனவர் தமிழில் நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன் என்று கூறி இருந்தார். அதற்கு முன்னோட்டமாக இந்தியில் வெளியாக உள்ள ‘பங்க் பங்க் என்ற படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட சம்மதித்துள்ளார். முன்னதாக இப்படத்தின் பாடல்கள் மும்பை யில் வெளியானது. தமிழில் மதன்கார்க்கி பாடல்கள் எழுதி உள்ளார். ஹாலிவுட்டில் டாம் குரூஸ் நடித்து வெளியான ‘நைட் அண்ட் டே‘ படத்தின் ரீமேக்தான் இப்படம். முதலில் இதில் நடிக்க ஷாஹித் கபூர் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் நீக்கப்பட்டு ஹிருத்திக் ரோஷன் தேர்வானார். ஏற்கனவே தான் நடித்த ‘கிரிஷ்  தமிழ் ரசிகர்கள் இடையே வரவேற்பு பெற்றதையடுத்து ‘பங்க் பங்க் படத்தின் ரிசல்ட் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறார் ஹிருத்திக்

 

SHARE