க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் இறுதிக்குள் வெளியாகும்

372

2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன்  தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகி 12ஆம் திகதி வரை இடம்பெற்றது.

நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இந்தப் பரீட்சையில் 6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்ச்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE