
176,534 மாணவர்கள் இவ்வாறு தகுதி பெற்றிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இவர்களில் 5737 பேர் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்திபெற்றிருப்பதுடன், பரீட்சைக்குத் தோற்றிய 264,772 மாணவர்களில் 9,444 மாணவர்கள் எந்தவொரு பாடத்திலும் சித்திபெறவில்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உயர்தரத்திற்கு தகுதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 2016ஆம் ஆண்டில் 75 வீதமாக உயர்த்துவதுடன், எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறத் தவறும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒரு வீதமாகக் குறைப் பதுமே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித் தார்.
கல்வியமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
கல்வி அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, பரீட்சைகள் ஆணையாளர் புஷ்பகுமார ஆகியோரும் இந்த ஊடகவி யலாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.
சாதாரண தர பெறுபேறு! தேசிய மட்டத்தில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி 5வது இடம்
க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுகளைக் கொண்ட பாடசாலைகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஐந்தாவது இடம்பெற்றுள்ளது.
இந்தப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 246 மாணவியர்களில் அநேகமானவர்கள் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர்.
கொழும்பு 8 தேவி பாலிகா மகா வித்தியாலயம் கூடுதலான பெறுபேறுகளைப் பெற்று முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 245 மாணவியர்களில் 124 மாணவியர் 9 ‘ஏ’ சித்திகளைப் பெற்றிருப்பதுடன், 83 வீதமானவர்கள் 8 ‘ஏ’ ற்கும் கூடுதலான புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
இந்தப் பாடசாலையில் எந்தவொரு மாணவியும் எந்தவொரு பரீட்சையிலும் தோற்றத் தவறவில்லையென கல்வியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இரண்டாவது இடத்தில் கம்பஹா ரத்னாவளி பாலிகா மகா வித்தியாலயமும்,
மூன்றாவது இடத்தில் மாத்தளை அரச விஞ்ஞானக் கல்லூரியும்,
நான்காவது இடத்தில் கொழும்பு விசாகா மகளிர் மகா வித்தியாலயமும் காணப்படுகின்றன.
சிறந்த பெறுபேறுகளை வழங்கிய பாடசாலைகளின் பட்டியலில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 24வது இடத்தில் காணப்படுகிறது.
மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் பாடசாலை 44வது இடத்திலும் காணப்படுகிறது.
2013ம் ஆண்டு க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர் – 31 ஜனவரி 2014
2013ம் ஆண்டு நமைபெற்ற க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன் தலைமையில் யாழ் கல்வி வலய முகாமைத்துவ மண்டபத்தில் 31 ஜனவரி 2014 அன்று இடம்பெற்றது.
வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா பிரதம விருந்தினராகவும் , மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தகம், கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் விசேட விருந்தினராகவும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற க.பொ.த (உயர்தர) பரீட்சையில் மாகாண மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை அமைச்சர் கௌரவித்தார். மாணவர்களுக்கு பதக்கங்கள், பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி.எஸ்.எஸ்.செபஸ்ரியன், வட மாகாண கல்விப் பணிப்பாளர் திரு.வை.செல்வராசா, பாடசாலைகள் வேலைகள் பணிப்பாளர் திரு.கே.குகனேசன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.