சசிகுமாரின் சிறந்த திரைப்படங்கள்.. ஓர் சிறப்பு பார்வை

59

 

திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முக திறமை கொண்டவர் சசிகுமார். இயக்குனர் பாலாவிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து பின் சினிமாவில் இயக்குனராக களமிறங்கினார்.

சிறந்த திரைப்படங்கள்
இந்நிலையில், இயக்குனர், நடிகர் என கலக்கி வரும் சசிகுமாரின் திரை வாழ்க்கையில் வந்த சிறந்த திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

இயக்கம்
சுப்ரமணியபுரம்

கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சுப்ரமணியபுரம். இப்படத்தின் மூலம் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் அறிமுகமானார் சசிகுமார். தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த கேங்ஸ்டர் திரைப்படங்களில் டாப் 5 லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக இப்படமும் இடப்பெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து ஜெய், கஞ்சாகருப்பு, சமுத்திரக்கனி, ஸ்வாதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சசிகுமார் இரு திரைப்படங்கள் இயக்கயிருந்தாலும், அதில் சுப்ரமணியபுரம் மட்டுமே மாபெரும் அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இயக்கத்தில் ஒரே ஒரு படம் என்றாலும் கூட, நடிப்பின் மூலம் பல சிறந்த படைப்புகளை கொடுத்துள்ளார் சசி குமார். அதை தற்போது பார்க்கலாம்.

நடிப்பு
நாடோடிகள்

2009ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் படத்தை சமுத்திரக்கனி இயக்கியிருந்தார். சசி குமார், விஜய் வசந்த், கஞ்சா கருப்பு, அபிநயா, பரணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத திரைக்கதையும், நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என கதையை கூறிய விதமும் மக்கள் மனதை தொட்டது.

சுந்தரபாண்டியன்

சசிகுமார் நடிப்பில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று சுந்தரபாண்டியன். இப்படத்தை எஸ்.ஆர். பிரபாகரன் என்பவர் இயக்க லட்சுமி மேனன், சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அயோத்தி

கடந்த ஆண்டு 2022ல் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று அயோத்தி. சசிகுமாருக்கு பல நாள் கழித்து கம் பேக் கொடுத்த திரைப்படமும் இதுவே ஆகும். மத ஒற்றுமை குறித்து அழுத்தமாக பேசிய இப்படம் என்றும் மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்திருக்கும் என்பதிலே எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாரை தப்பட்டை

பாலா இயக்கத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறினாலும், இப்படத்தில் சசிகுமாரின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது. சசிகுமாரின் திரைவாழ்க்கையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய டாப் 5 திரைப்படங்களில் கண்டிப்பாக தாரை தப்பட்டையும் இடம்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

SHARE