ஆசியக் கிண்ணத்தை வெற்றி கொண்டமைக்காக இலங்கை கிரிக்கெட் அணிக்கு விஷேட கொடுப்பனவை வழங்க இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி 100,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில் கலந்துகொள்ள 500,000 டொலர்கள் இலங்கை அணிக்கு வழங்கப்படவுள்ளது.
அத்துடன், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் 250,000 டொலர்களும், கிண்ணத்தைக் கைப்பற்றினால் மேலதிகமாக 250,00 டொலர்களும் வழங்கப்படவுள்ளன.
மேலும் 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணிக்கு 750,000 டொலர்களும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் 250,000 டொலர்களும், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் 750,000 டொலர்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி இவ்வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில் அரையிறுதிக்குச் சென்றால் 50,000 டொலர்களும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் 25,000 டொலர்களும் கிண்ணத்தை வெற்றிகொண்டால் 25,000 டொலர்களும் வழங்க தீரமானிக்கப்பட்டுள்ளது.