புல்முடுவ – துடுவ கடற் பிரதேசத்தில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 50 கிலே கிராம் மீன் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி படகு மற்றும் இயந்திரங்கள் என்பன நேற்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
எனினும் இவ்வாறு சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட மீன் மற்றும் சட்ட விரோத மீன்பிடி இயந்திரங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புல்முடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.