சட்டவிரோதமான சூது விளையாட்டில் ஈடுபட்ட 5பேர் கைது

238

வவுனியா தட்சணாங்குளம் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் சட்டவிரோத சூது விளையாட்டில் ஈடுபட்ட 5 பேர் ஒரு தொகைப்பணத்துடன் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பண்டாரிக்குளம் குளக்கட்டு வீதியூடாக தட்சணாங்குளம் செல்லும் குளக்கட்டிலுள்ள கள்ளுத்தவறணையில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக முறையில் பணம் வைத்து சூது விளையாட்டு இடம்பெற்று வருவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிம தலைமையில் கீழ் செயற்படும் புலனாய்வுப்பிரிவினருக்கு தகவல்  கிடைத்தது.

அதனடிப்படையில் நேற்று பிற்பகல் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயப்படும் போதை ஒழிப்புப்பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கள்ளுத்தவறணையில் சட்டவிரோதமான சூது விளையாட்டில் ஈடுபட்ட 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து சூது விளையாட்டிற்குப்பயன்படுத்திய ஒரு தொகைப்பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

SHARE