தொம்பே பகுதியில் பாரியளவில் உற்பத்தி செய்யப்பட்ட சட்டவிரோதமா மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 46 வயதுடைய வல்கம – மல்வான பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
அத்துடன் அவரை கைதுசெய்யும்போது அவரிடமிருந்து, மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தப்படும் 1890 லீட்டர் கோடாக்கள் (10 பீப்பாய்கள் ) கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.