சட்டவிரோத மின் இணைப்பு கம்பியில் சிக்கி சிறுமியும் இளைஞனும் மரணம்….

308

 

இரத்தினபுரி – கொலோன்ன பிட்டவெல பிரதேசத்தில் சிறுமியும் இளைஞர் ஒருவரும் சட்டவிரோதமான மின் இணைப்பு கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கறுவாத்தோட்டம் ஒன்றுக்கு அருகில் காணப்பட்ட சட்டவிரோதமாக மின் இணைப்பு பெறப்பட்டிருந்த கம்பியில் சிக்கியதில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

சிறுமியும், இளைஞனும் முகநுல் பக்கத்தின் ஊடாக நட்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளதுடன் இளைஞன், நேற்றிரவு சிறுமியைக் காண அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதனை வீட்டில் உள்ளவர்கள் கண்டுள்ளதுடன் அப்போது, சிறுமியும் இளைஞனும் இருளில் ஓடிச் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து கொலோன்ன பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

SHARE