சதம் விளாசிய பாத்தும் நிஸ்ஸங்க! வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய இலங்கை

90

 

வங்கதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இலக்கை நிர்ணயித்த வங்கதேசம் அணி
இலங்கை வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில், வங்கதேச அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.

அணித்தலைவர் ஷாண்டோ 40 ஓட்டங்களிலும், சவுமியா சர்க்கார் 68 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அணியின் ஸ்கோர் 130 ஆக இருந்தபோது, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவின் தாக்குதல் ஆரம்பித்தது.

டௌஹித் ஹிரிடோய் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு ஒருப்புறம் நெருக்கடி கொடுத்து வந்தாலும், மறுப்புறம் விக்கெட்டுகள் மலமலவென சரியத் தொடங்கின.

50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம், 7 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்கள் குவித்தது.

டௌஹித் ஹிரிடோய் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகள் விளாசி ஆட்டமிழக்காமல் 102 பந்துகளில் 96 ஓட்டங்கள் குவித்தார்.

ஹசரங்கா 4 விக்கெட்டுகளும், தில்ஷன் மதுஷன்கா 2 விக்கெட்டுகளும், பிரமோத் மதுஷன் ஒரு விக்கெட்டும் இலங்கை சார்ப்பில் வீழ்த்தினர்.

வெற்றியை கைப்பற்றிய இலங்கை
வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் பாத்தும் நிஸ்ஸங்க(Pathum Nissanka) 113 பந்துகளில் 114 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

இதில் 13 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடக்கம். மறுமுனையில் பாத்தும் நிஸ்ஸங்க உடன் கைகோர்த்த சரித் அசலங்கா(Charith Asalanka) 93 பந்துகளில் 91 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

இறுதியில் 47.1 ஓவர்கள் முடிவிலேயே 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலங்கை அணி 287 ஓட்டங்கள் குவித்தது.

அத்துடன் வங்கதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றுள்ளது.

SHARE