சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்”. |
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் “சோலார் ஸ்டார்” ராஜகுமாரன் நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தின் புதிய தகவல் ஒன்று வெளி வந்துள்ளது. அது என்னவென்றால் நம்ம “பவர் ஸ்டார்” இதில் இருக்கிறாராம். நீண்ட நாள் சந்தானம் இது பற்றி வாய் துறக்கவே இல்லை, ஆனால் இந்த செய்தி எப்படியோ கசிந்து விட்டது. “பவர் ஸ்டார்” கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தில் சந்தானத்துடன் நடித்திருந்தார், இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த கூட்டணி தொடர வேண்டும் என்று எண்ணிய சந்தானம் மறுபடியும் “பவர் ஸ்டார்” உடன் பட்டையை கிளப்ப உள்ளார். “கேஸ்ல மாட்டாம இருந்த சரி”. |