சந்திரனின் நிலவில் தண்ணீர் அற்புதமான கண்டுபிடிப்பு

208

விண்வெளி ஆராய்ச்சிகள் பொதுவாக கிரகங்களை பற்றியதாகவே அதிகளவில் காணப்படுகின்றன.

இவ் ஆராய்ச்சிகளின் விளைவாக பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

சமீபத்தில், சனிக்கிரகத்தின் துணைக் கோள்களான டைட்டன், என்சலடஸ் ஆகிய இரு நிலவுகளிலும் பனிக்கட்டிக்கு அடியில் கடல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், சனி கிரகத்தின் மற்றொரு துணைக் கோளான டையோன் என்ற நிலவிலும் கடல் இருப்பதாக பெல்ஜியத்தின் ராயல் ஆய்வக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கடலானது நிலவின் நிலத்திற்கு அடியில்100 கி.மீ ஆழத்தில் அமைந்துள்ளதாகவும், இதனை சுற்றி மிகப் பெரிய பாறை படிமங்கள் அமைந்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், நீண்ட ஆயுள் கொண்ட நுண்ணுயிர்கள் இங்கு வாழவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

SHARE