6–வது ஐ.பி.எல். போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டத்தில் வீரர்கள் ஈடுபடுகிறார்களா? என்று தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் விளையாடியபோது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வேகப்பந்து வீரர் மார்னே மார்கலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சந்தித்துள்ளார். இந்த சந்தேகத்துக்குரிய நபர் சூதாட்ட தரகராக இருப்பாரா? என்பது தெரியவில்லை. ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.