சந்தைக்கு வருகின்றது ஆப்பிளின் புதிய iPad Pro

204

அண்மைக்காலமாக ஆப்பிள் நிறுவனமானது ஐபோன்களை அறிமுகம் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தது.

இதனல் குறிப்பிட்ட காலத்தில் ஐபேட்கள் எதுவும் அறிமுகமாகியிருக்கவில்லை.

இக் குறையை தீர்க்கும் முகமாக அடுத்தவருடம் மார்ச் மாதம் 10.5 அங்குல அளவுடைய iPad Pro இனை அறிமுகம் செய்யவுள்ளது.

ஏற்கணவே iPad Pro பதிப்பில் சில சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

எனினும் இவற்றுள் ஒன்று 9.7 அங்குல அளவையும், மற்றையது 12.9 அங்குல அளவையும் கொண்டிருந்தது.

அமெரிக்கா போன்ற சில நாடுகளில் கல்வித்துறையில் 10 அங்குல அளவினை விடவும் கூடிய ஐபேட்களை பயன்படுத்தவே விரும்புகின்றனர்.

எனவே 9.7 அங்குல அளவுடை iPad சிறியதாக இருப்பதுடன், 12.9 அங்குல iPad விலை கூடியதாகவும் இருக்கின்றது.

இப் பிரச்சினைகளுக்கு தீர்வாகவே 10.5 அங்குல அளவுடைய iPad Pro அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE