சன் டிவியின் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்- எந்த தொடர்கள் தெரியுமா, முழு விவரம்

105

 

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.

பல வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொலைக்காட்சியில் அதிகமாக சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, டிஆர்பியிலும் எப்போதும் டாப்பிலேயே உள்ளது.

இப்போது கூட வாரா வாரம் வரும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது இந்த தொலைக்காட்சி தொடர்களான சிங்கப்பெண்ணே, கயல், எதிர்நீச்சல், வானத்தை போல போன்ற தொடர்கள் தான்.

தற்போது அன்பே வா போன்ற சில சீரியல்கள் முடிவுக்கு வர புத்தம் புதிய தொடர்கள் உள்ளே வருகின்றன.

நேரம் மாற்றம்
தற்போது புதிய தொடர்கள் உள்ளே வருவதால் சில பழைய சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அப்படி இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றம் நடக்கிறது. இனியா தொடர் இனி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது, அதிலும் வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாக உள்ளது.

அதேபோல் Mr.மனைவி தொடரும் இனி இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக இதுவும் 7 நாட்கள் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

SHARE