தமிழில் சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். பல வருடங்களுக்க முன்பில் இருந்தே இந்த தொலைக்காட்சியில் சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கியது.
பல சாதனைகளை செய்த தொடர்கள் இதில் ஒளிபரப்பாகி இருக்கிறது, இப்போதும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தை போல, எதிர்நீச்சல் என வெற்றிகரமாக நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
முடியும் தொடர்
இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒரு தொடர் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்துள்ளது. அதாவது ரசிகர்களின் பேராதரவை பெற்ற அன்பே வா தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம்.
விரைவில் சரிகமப தயாரிக்கும் 2 சீரியல்கள் சன் டிவியில் தொடங்க உள்ளதாம். அன்பே வா தொடர் முடிவுக்கு வரப்போகிற செய்தி கேட்டு ரசிகர்கள் கொஞ்சம் வருத்தம் அடைந்துள்ளனர்.