சன் டிவி சீரியல் நடிகர் பிர்லா போஸ் மகனை கடத்திய கும்பல்.. போலீஸ் விசாரணை.. அதிர்ச்சியளிக்கும் தகவல்

80

 

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிர்லா போஸ். சீரியல்கள் மட்டுமின்றி படங்களிலும் நடித்து வருகிறார். திருமதி செல்வம், கோலங்கள் போன்ற சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது தங்கமகள் எனும் சீரியலில் நடித்து வருகிறார்.

காரால் பிரச்சனை
மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிர்லா போஸ் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பார்க்கிங் படத்தில் வந்தது போல், நடிகர் பிர்லா போஸ் மற்றும் அவரது கீழ் வீட்டு காரர் இடையே காரால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இவர் தனது குடும்பத்துடன் அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், தன்னுடைய வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர், பிர்லா போஸ் காரை இடித்துவிட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாம்.

அந்த இளைனரும், பிர்லா போஸும் தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்ததால், இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை வலுவாகிவிட்டது.

மகனை கடத்திய கும்பல்
இந்த பிரச்சனையால் அந்த ஐலைனர், பிர்லா போஸை பழிவாங்க வேண்டும் என நினைத்து, அவருடைய மகனை கடத்த முடிவு செய்துள்ளார்.பிர்லா போஸ் வீட்டில் இல்லாத நேரமாக, 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்த, பிர்லா போஸ் மகனை கடத்தி சரமாரியாக அடித்துள்ளனர் என கூறப்படுகிறது.

பின் எந்த வித சந்தேகமும் வராத வண்ணம், பிர்லா போஸ் மகனை அவரது வீட்டிலேயே இறக்கிவிட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்து மகனை பார்க்க பதறியடித்து ஓடி வந்துள்ளார் பிர்லா போஸ்.

மருத்துவ சிகிச்சைக்கு பின், இப்படி செய்தது கீழ் வீட்டில் இருக்கும் இளைஞர் தான் என தெரியவந்த நிலையில், அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் பிர்லா போஸ். புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE